திங்கள், 20 அக்டோபர், 2008

ஆணா? பெண்ணா?

இன்று நான் தமிழமுதம் என்னும் வலைப்பூவில் ஆணா ...பெண்ணா ...யார் சிறந்தவர்கள் என்ற விவாதத்தில் கலந்துகொண்டேன். ஆனால் அந்த வலைப்பூவில் தமிழில் எழுத எனக்கு தெரியாததால் அதே தலைப்பை இங்கு தமிழில் விவாதிக்க இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .
அந்த வலைப்பூவில் பெண்களே சிறந்தவர்கள் என்று நிறைய சகோதரிகள் இடுகை இட்டிருந்தார்கள். ஆனால் எனது கருத்து என்னவென்றால் ஆண்களே பெண்களை விட மேலானவர்கள் என்பதாம். ஏனெனில் நமது தமிழ் குடும்பங்களில் ஆண்களே குடும்பத்திற்கான தேவைகளை பணம் மற்றும் இதர பொறுப்புகளை பெண்களை விட ஆண்களே அதிகம் பங்களிப்பு செய்கிறார்கள்.
அதில் இன்னொரு சகோதரி சொல்கிறார்கள் பெண்கள் அழகானவர்கள் . ஆமாம் நானும் ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அந்த அழகு மிளிர அழகு சாதனங்கள், நல்ல ஆடைகள், பொன் நகைகள் இவை எல்லாம் இருந்தால் தானே அழகு மிளிரும்.
அதற்கு தேவை பணம் . சில குடும்பங்களில் பெண்களும் சம்பாதிக்கிறார்கள் நான் அதை மறுக்கவில்லை, மறக்கவில்லை. நான் சொல்லுவது பெருவாரியான குடும்பகளில் இருக்கும் எதார்த்த நிலைகளை மனதில் கொண்டுதான். என்ன நான் சொல்லுவது சரியா? தவறா?

1 கருத்து:

நிகழ்காலத்தில்... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.